
சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹரப்பான் அரசு மேற்கொண்டு வரும் சமூக நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பு கலந்துரையாடல் செமினியில் நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில ம மக்கள் நன்மை அடையும் வகையில் ஏராளமான திட்டங்களை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் திட்டங்களில் பங்கேற்று இந்திய சமுதாயம் நன்மை அடைவது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
செமினி கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி மற்றும் மலேசியா அஜித் ரசிகர் மன்றத் தலைவர் தேவேந்திரன் தலைமையில் இந்த விளக்க கூட்டம் சிறப்பு முறையில் நடைபெற்றது.

