
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை நோக்கி உலுலங்காட் ம இகா தேர்தல் நடவடிக்கை அறை நேற்று திறக்கப்பட்டது.
செமினி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோகான் இந்த தேர்தல் நடவடிக்கை அறையை திறந்து வைத்தார்.
உலுலங்காட் மஇகா தொகுதி தலைவர் டாக்டர் செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ம இகா உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
உலு லங்காட் நாடாளுமன்றம், டூசுன் துவா மற்றும் செமினி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற போராடுவோம் என்று டாக்டர் செல்வா தெரிவித்தார்.

