1,474 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிப்பு – 28 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 2 முதல் 8 ஆம் தேதி வரை 1,474 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20,376 டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இப்போது இந்த எண்ணிக்கை 45,018 ஆக அதிகரித்துள்ளது,

இது 120.9 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர், டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 14 இறப்புகளுடன் ஒப்பிடுகையில் டிங்கி சிக்கல்களால் 28 இறப்புகளுடன் ஒட்டுமொத்த இறப்புகளும் 100 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles