
பக்கத்தான் ஹராப்பானுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த அஸ்மின் அலி, ஸூரைடா கமாரூடின் மற்றும் சைபுடின் அப்துல்லா ஆகியோர் நம்ப முடியாதவர்கள் என்று பிரபல சமூக போராட்ட வாதி ஹரிஸ் இப்ராஹிம் சாடியுள்ளார்.
அம்னோவை நிராகரிப்போம் என்று முன்பு பிரச்சாரத்தை தொடங்கிய இவர் இப்போது இந்த மூவரும் நம்ப கூடியவர்கள் அல்ல என்று பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த மூவரும் நம்பிக்கை குரியவர்கள் அல்ல.
இன்னும் ஒரு மாதத்தில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறலாம். நம்பிக்கைத் துரோகிகளை புறக்கணிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

