மூடப்பட்டிருந்த இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு உயிர் கொடுத்தவர் மனிதவள அமைச்சர் சிவகுமார்! டத்தோ காயத்ரி ரகுமூர்த்தி பெருமிதம்

கிள்ளான், செப் 6-
அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் 14 ஆண்டுகளாக பரிதவித்தோம்.

அப்போது எல்லாம் எந்தவொரு இந்திய அமைச்சரும் எங்களுக்கு உதவவில்லை.

பதவியில் இருந்தார்கள் தவிர இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களை பெற்றுத் தரவில்லை.

ஆனால் மனிதவள அமைச்சராக பதவி ஏற்று இந்த 9 மாதத்தில் வ. சிவகுமார் எங்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு கண்டிருக்கிறார்.

ஐந்து முக்கிய துறைகளில் அந்நிய தொழிலாளர் வேலை செய்வதற்கு மூன்று நாட்களில் அனுமதியை பெற்றுத் தந்தார்.

பின்னர் உணவகங்கள் எதிர் நோக்கிய பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

இப்போது உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் அந்நிய தொழிலாளர் வேலை செய்வதற்கு அனுமதியை பெற்றார்.

மனிதவள அமைச்சர் சிவகுமார் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு ஆதரவு தரும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் அந்நிய தொழிலாளர் வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறார்.

இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மனிதவள அமைச்சர் சிவகுமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று டத்தோ காயத்ரி ரகுமூர்த்தி தெரிவித்தார்.

இந்த 14 ஆண்டுகளில் எந்தவொரு அமைச்சரும் செய்யாத சாதனையை சிவகுமார் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் மூடப்பட்டிருந்த இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு உயிர் கொடுத்தவராக அமைச்சர் சிவகுமார் விளங்குகிறார் என்று டத்தோ காயத்ரி ரகுமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று கிள்ளான் தெங்கு கிளானாவுக்கு சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் இந்திய பாரம்பரிய தொழில் வியாபாரிகளை சந்தித்து நிலவரங்களை நேரில் கேட்டறிந்தார்.

பின்னர் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் சிவகுமார் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி இந்திய வணிகர்கள் மாலைகளை அணிவித்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் டத்தோ காயத்ரி ரகுமூர்த்தி, மலேசிய இந்தியர் தொழில் துறை சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், கிள்ளான் இந்தியர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சார்லஸ், கிள்ளான் நகைக் கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.பி. இராமன், சிலாங்கூர் கோலாலம்பூர் இந்தியர் வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் இராகவன், பீக்கிம் தலைவர் டத்தோ தமிழ் செல்வம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles