நெடுதூர ஓட்டப்பந்தயத்தில் அசத்திய சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.

சுங்கை புலோ, செப் 6-

சுங்கை புலோவில் அமைந்துள்ள சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் இன்று மாணவர்களுக்கான நெடுதூர ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டத்து.
3, 4, 5, மற்றும் 6 ஆம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டப்பந்தயம் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் அமைந்திருந்த்தது.
இந்த நெடுதூர ஓட்டப்பந்தயம் இன்று காலை 8.30 அளவில் சுங்கை புலோ பொது மண்டபதத்தில் தொடங்கி அந்த வட்டாரத்தைச் சுற்றி 3 கிலோமீட்டர் தூரம் ஓடி வந்தனர்.
மாணவர்களுக்கான இந்த போட்டியை சிறப்பான முறையில் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த்தது. அதே வேளையில் மாணவர்களுக்கான பாதுகாப்பு அம்சமான அம்புலன்ஸ் சேவையையும் பங்கேற்பாளர்களுக்கு உணவு, பாணங்கள் அனைத்தையும் பெற்றோர்களின் ஆதரவோடு பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்ததாக அதன் தலைவர் குமரகுரு மனோகரன் தெரிவித்தார்.

இந்த போட்டியை ஏற்பாடு செய்து வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட பெற்றோர்களுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார். மேலும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் கூறினார். போட்டியில் பங்குபெற்று ஆண்கள் பிரிவில் வெற்றிவேல் சிவகுமரன், யஸ்வின் கண்ணன், ஜோர்ஜ் வெனெடிக், சக்திவேல் சிவகுமரன், கிர்தீஸ் பார்த்திபன் பெண்கள் பிரிவில் சஹானா கேசவன், கோகுலஸ்ரீ சந்திரகாந், ரஞ்சனா கிருஷ்ண மூர்த்தி, ஜாஸ்வினி பொன்னம்பலம், நிஷா அன்பரசன் ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று வட்டார ரீதியில் பள்ளியை பிரதிதிக்கவுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles