


ஈப்போ செப் 7-
ஈப்போ ஜாலான் labrooy இடத்தில் 20 க்கும் மேற்பட்ட சிறார்களை பராமரித்து வரும்
Pertubuhan Kebajikan Kanak-Kanak Pelangi
(Rainbow Children’s Home) இல்லத்திற்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் 10,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.
நேற்று இந்த இல்லத்திற்கு சிறப்பு வருகை புரிந்த அமைச்சர் சிவகுமாருக்கு இல்லத்தின் பராமரிப்பாளர் ஜெனிபர் முழு விளக்கம் அளித்தார்.
இந்த இல்லத்தில் 20க்கும் மேற்பட்ட சிறார்கள் தங்கியிருக்கும் வேளையில் 5 பேர் பணிபுரிகின்றனர் என்று ஜெனிபர் தெரிவித்தார்.
இந்த இல்லத்தின் வளாகத்தை வாடகைக்கு எடுப்பதற்கும் 20 சிறார்கள் தங்குவதற்கும் மையத்தை பராமரிப்பதற்கும் 10,000 வெள்ளியை மனித வள அமைச்சர் 10,000 வெள்ளியை அமைச்சர் சிவகுமார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் கொடுத்த இந்த நன்கொடை
இங்குள்ள குழந்தைகளுக்கு நலன்களுக்கும் கல்வியை வழங்குவதற்கும் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.

