இளம் தலைமுறையினரின் கனவுகளை நனவாக்க JELAJAH MADANI மதிப்புமிக்க திட்டம் ! மனிதவள அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

கிள்ளான் செப் 9 –
JELAJAH MADANI KEMENTERIAN SUMBER MANUSIA என்ற பயண திட்டம் இளம் தலைமுறையினரின் கனவை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

SOCSO,
NIOSH, TalentCorp மற்றும் HRDcorp ஆகியவை இந்த திட்டத்திற்கு கடுமையாக உழைத்து வருகின்றன.

இந்த திட்டத்தை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

இந்த திட்டம் மனித வள அமைச்சின் முன் முயற்சியாகும்.

இது
இளம் தலைமுறையினர் தங்கள் கனவுகளை நனவாக்க இது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகும்.

அவர்களின் திறமைக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நேற்று கிள்ளான் செந்தோசாவில் நடைபெற்ற ஜெலாஜா மடானி மனிதவள அமைச்சின் பயண திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது தெரிவித்தார்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட், டேலாண்ட் கோர்ப் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி மேத்தியூஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles