


தஞ்சோங் சிப்பாட்,
செப் 10-
கோலலங்காட் மாவட்டத்தில் உள்ள தஞ்சோங் சிப்பாட் ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலய கட்டட திருப்பணிக்கு 50,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மனித வள அமைச்சர் சிவகுமார் நேற்று அறிவித்தார்.
நேற்று நடைபெற்ற தஞ்சோங் சிப்பாட் ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தின் ஆவணி மாத திருவிழாவில் மனித வள அமைச்சர் சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.
ஆலயத் தலைவர் லெட்சுமணன்,
செயலாளர் முத்தழகன்,
கட்டடக் குழு தலைவர்
வேலாயுதம் ஆகியோர் தலைமையில் ஆலயத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஒரு ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் தற்போது ஆறு லட்சம் வெள்ளியில் திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.
75 விழுக்காடு திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில் இன்னும் எஞ்சிய வேலைகள் முடிவடைய நிதி தேவைப்படுவதாக ஆலயச் செயலாளர் முத்தழகன் தெரிவித்தார்.
இந்த ஆலயத்தின் திருப்பணிக்கு உதவும் வகையில் தமது சார்பில் 50,000 வெள்ளியை வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

