
நாட்டிலுள்ள இந்தியர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை களையவதோடு அவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஒன்றுமை அரசாங்கத்தின் அனைத்து இந்திய கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் அமிடி தெரிவித்தார்.
குறிப்பாக நாட்டில் மூத்த அரசியல் கட்சி மஇகா ஆகும். இதற்கு முன்பு தே.மு.வில் உள்ள இந்திய கட்சிகள் பிளவுப்பட்டிருந்துருக்கலாம். ஆனால் என் தலைமைத்துவத்தில் அது கூடாது. இந்திய சமுதாயத்தின் நலன் கருதி அவை அனைத்தும் ஒன்றாக செயல்பட வேண்டுமென அவர் சொன்னார்.
இந்திய சமுதாயத்தில் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு என பல தேவைகள் உள்ளன. மேற்கல்வி முடித்த பலருக்கு வேலை வாய்ப்புகள் இல்லைம் இதில் குண்டர் கும்பல் ஈடுபாடு தலையோங்கி உள்ளது. இவற்றை போக்க இந்திய கட்சிகள் பாடுபட வேண்டும். சமுதாய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென அவர் சொன்னார்.
இன்றைய சூழலில் குறைக்கூறும் அரசியல் போக்கு தலையோங்கி உள்ளது. குறை கூறி குற்றம் சாட்டிதான் போஸ் கூவை (டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்) சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால் நடந்தது என்ன? வெளியில் பல போஸ் கூ ஆதரவாளர்கள் உறுவாகி அவருக்கு லட்சக்கணக்கானவர்களின் ஆதரவு பெருகிவிட்டது.
போஸ் கூ-விற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதனால் அண்மையில் மக்களவையில் அனுமதிபெற்ற RCIகுழுவை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றார் ஜாஹிட்.
நீதிமன்ற ஊழல் வழக்குகளை விசாரணை செய்ய இந்த RCI சிறப்பு குழு அமைக்கப்படும். மக்களவையில் ஒப்புதல் கிடத்தால் மட்டுமே இந்த அமைப்பு செயல்பட முடியும்.
அரசியல் உலகத்தில் தேசிய முன்னணி தற்போது இருளான குகையை கடந்து செல்லும் தருனம். கண்டிப்பாக நாம் வெளிச்சத்தை பார்ப்போம். ஆகையால் தேசிய முன்னணியிலுள்ள உறுப்புக் கட்சிகளும் தோழமை கட்சிகளும் தே.மு.வின் கொள்கையை ஏற்று செயல்பட வேண்டும் என மக்கள் சக்தியின் 15ஆவது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து பேசும்போது அவர் சொன்னார்.
தேசிய முன்னணியின் செயல்பாடுகள் முன்னோக்கி நகர வேண்டும். அதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் சக்திக்கு செனட்டர் பதவி வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள் சக்தி தலைவரைவிட நான் பெரியவன். அண்ணனிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்துகிறேன் என டத்தோஸ்ரீ ஹாஜிட் அமிடி தெரிவித்தார்.

