
தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றும் சூட்ச்சமங்கள் இனியும் மக்கள் மத்தியில் செல்லுபடி ஆகாது என்பதற்கு ஜொகூர், பூலாய் நாடாளுமன்றம், சிம்பாங் ஜெராம் சட்டமன்ற தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் அபார வெற்றி பெற்றது ஓர் எடுத்துக்காட்டாகும்.
இனியும் மக்களை ஏமாற்றும் செயல்கள் நடக்காது. மக்கள் உஷாராக இருக்கிறார்கள். இனியும் பச்சை அலை கதையெல்லாம் பலிக்காது என மக்கள் சக்தி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரேன் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்றது மாகத்தான வெற்றி கிடையாது என்றெல்லாம் பேசுவார்கள். அதையெல்லாம் நாம் பொருட்படுத்த தேவையில்லை என அவர் சொன்னார்.
பக்காத்தான் ஹராப்பான் சிம்பாங் ஜெராமில் 3,514 பெரும்பான்மை வாக்குகளிலும் பூலாயில் 18,641 பெரும்பான்மை வாக்குகளிலும் வென்றது.
தலைநகரிலுள்ள அனைத்துலக மாநாட்டு மையத்தில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 15ஆவது பேராளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 457 பேராளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு சிறப்பு முகராக நாட்டின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் அமிடி கலந்து கொள்ளவுள்ளார்.

