பத்து காஜா Kampung Baru Desa Changkat @ India Settlement பகுதியில் 230 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கினார் மனிதவள அமைச்சர் சிவகுமார்

பத்து காஜா, செப் 13-
பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள Kampung Baru Desa Changkat @ India Settlement இடங்களில் வாழும் B-40 பிரிவைச் சேர்ந்த 230 குடும்பங்களுக்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் உணவுக் கூடைகளை வழங்கி உதவி புரிந்தார்.

நேற்று பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி மக்களை நேரில் சந்தித்த மனிதவள அமைச்சர் சிவகுமார் அவர்களுக்கு உதவிகளை நல்கினார்.

மனிதவள அமைச்சில் பல்வேறு பணிகளுக்கு இடையே அமைச்சர் சிவகுமார் வாரம் தோறும் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதிக்கு வருகை புரிந்து மக்களை சந்தித்து அவர்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நேற்று பத்து காஜா இந்தியன் செட்டில்மென்ட் பகுதியில் பி-40 பிரிவைச் சேர்ந்த மக்களுக்கும் உதவிக் கரம் நீட்டினார்.

இந்த நிகழ்வில் துரோனோ மற்றும் மெங்கெலும்பு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஜசெக கட்சியினரும் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles