20 இல்லத்தரசிகளுக்குசொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்திற்கானசெலவை மகா விஷ்ணு ஏற்றுக் கொண்டார்

சொக்சோ எனப்படும் சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தற்போது இல்லத்தரசிகளுக்கு சொக்சோ காப்புறுதி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இல்லத்தரசிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மாதத்திற்கு 10 வெள்ளி வீதம் என்ற ரீதியில் வருடத்திற்கு 120 வெள்ளி மட்டுமே இந்த சமூகநல காப்புறுதி திட்டத்திற்கு செலுத்த வேண்டும்.

அந்த வகையில் கோலசிலாங்கூர் மகா மாஜூ கறி ஹவுஸ் உரிமையாளர் மகா விஷ்ணு தமது சார்பில் 20 இல்லத்தரசிகளுக்கான சொக்சோ சமூக நல பாதுகாப்பு காப்புறுதி திட்டத்திற்கான செலவை மகா விஷ்ணு ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டமாக 20 இல்லத்தரசிகளுக்கான செலவை ஏற்றுக் கொண்ட இவர் மிக விரைவில் மேலும் 80 இல்லத்தரசிகளுக்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக மகா விஷ்ணு அறிவித்தார்.

கோலசிலாங்கூர் மாவட்டத்தில் வருமானம் குறைந்த இல்லத்தரசிகளுக்கு உதவு முன் வந்திருக்கும் மகா விஷ்ணுவின் சேவையை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் வெகுவாக பாராட்டினர்.

சொக்சோ நிறுவனத்தின் மிகச்சிறந்த சமூக நல திட்டமாக இந்த இல்லத்தரசிகளுக்கான காப்புறுதி விளங்குகிறது.

வருமானம் குறைந்த இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள் அதிக அளவில் தங்களை பதிந்து கொள்ளும்படி அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles