
கோலாலம்பூர் செப் 20-
International Public Employment Form எனப்படும் அனைத்துலக பொது வேலை வாய்ப்பு 2023 மாநாடு வேலை தேடும் பட்டதாரிகளுக்கு ஒரு உந்து சக்தியாக விளங்கும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்துலக பொது வேலை வாய்ப்பு மாநாடு IPEF) 2023, கோலாலம்பூர் கொன்வென்ஷன் சென்டரில் (KLCC) அக்டோபர் 11-13 தேதிகளில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
தொழிலாளர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் பார்வையில் குறிப்பாக பட்டதாரிகள் மத்தியில் இந்த மாநாடு முக்கிய பங்காற்றும்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனம் (Perkeso) அர்ப்பணிப்பின் அடிப்படையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொழிலாளர் சந்தை கோரிக்கைகள் பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்கும்.
தொழிலாளர் வலுவூட்டல், தொழில்நுட்பம், தொழிற்பயிற்சிக் கல்வி
(TVET) மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை இதில் அடங்கும்.
இதனால் பணியாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் நிறுவனத்தின் செயல்திறன்களை மேம்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
பல்வேறு உலகளாவிய மாபெரும் நிறுவனங்கள் ஒரு புதிய திசையை நோக்கி வழி வகுத்து வருவதால் தொழிலாளர்களின் செயல்பாடுகள் பொருத்தமானதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்.

பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியும் இந்த மாநாட்டில் இடம்பெறுவார் அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
கசானா ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆலோசகர், பேராசிரியர் டாக்டர் ஜோமோ குவாமே சுந்தரம், போவ்லிங் ஜாம்பவான், டத்தோ ஷாலின் சுல்கிஃப்லி மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் நிர்வாக நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர்
Registration can be made through ipef2023.perkeso.gov.my. அல்லது
For any inquiries, contact PERKESO at 1-300-22-8000, 019-6101294, 019-6057634, 019-6093342 for local participants and 017-6881641, 019-2400714 for international participants or e-mail to ipef.2023@perkeso.gov.my. தொடர்பு கொள்ளலாம்.

