2024 பட்ஜெட் குறித்துஜசெக அமைச்சர்கள்-எம்.பி.க்கள் இடையே கலந்துரையாடல்

கோலாலம்பூர் செப் 20-
வரும் நவம்பர் மாதத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

2024 பட்ஜெட் குறித்து ஜசெக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் இடையே நேற்று கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.

நேற்றிரவு நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் ஜசெக மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் கலந்து கொண்டார்.

வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஹா கோர் மிங், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், மனிதவள துறை அமைச்சர் வ சிவகுமார் மற்றும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ ஆகியோருடன் ஜசெக எம்.பி.க்களும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles