பி.கே.ஆர் தெப்ராவ் தொகுதி ஏற்பாட்டில் ஜொகூர் இலவச சுகாதார முகாம் 2023

பி.கே.ஆர் ஜொகூர் தெப்ராவ் தொகுதி, 24மணி நேர திராம் பாலிகிளினிக் மற்றும் ஜொகூர் மாநில பெண்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் சங்கம் (ஜெயிவா) இணைந்து, 2023ஆம் ஆண்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் இலவச சுகாதார முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வருகிற 23ஆம் தேதி செப்டம்பர் மாதம் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெறும்.

டேவான் ராயா தாமான் பெலாங்கி இண்டா, ஜாலான் சன்தே 5, தாமான் பெலாங்கி இண்டாவில் நடைபெறவிற்பதாக பி.கே.ஆர் தெப்ராவ் தொகுதி மகளிர் துணைத்தலைவி மற்றும் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு செயலாளர் குமாரி மு.அபிராமி தெரிவித்தார்.

ஜொகூர் மக்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த ஜொகூர் சுகாதார முகாமில் கலந்து கொண்டு உங்கள் உடல் நலத்தை இலவசமாகச் சோதித்துச் செல்லுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.

B40 குழு அல்லது PeKa B40 கான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் என்பது மலேசியச் சுகாதார அமைச்சகத்தின் மூலம் அரசாங்கத்தின் முன்முயற்சியாகும்.

இது தொற்றாத நோய்களில் (NCD) கவனம் செலுத்துவதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட மக்களைச் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனிடையே, செப்டம்பர் 23, 2023 அன்று “பொரோதைக் ஹீல்த்’ (protecthealth)- B40 குழுவிற்கு இலவச சிகிச்சை பெற அரசாங்கம் ஆதரவாளிக்கு விபரங்களை 24மணி நேர  திராம் பாலிகிளினிக் குழுவினர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என பாலிகிளினிக் திராம்  ஒருங்கிணைப்பாளர் குமாரி நூருல் சித்தி தெரிவித்தார். 

ஆகையால் வருகிற 23ஆம் நாள் அன்று ஜொகூர் மக்கள் இந்த இலவச சுகாதார முகாமில் கலந்து கொள்ள வாய்ப்பைத் 
தவறவிடாதீர்கள்.

மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் என பல்வேறு சேவைகள் மற்றும் செயல்பாடுகள் ஜொகூர் மக்களுக்காக இந்த முகாம் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது என மு.அபிராமி கூறினார்.

மேலும் இம்முகாமின் முக்கிய நோக்கம், மடானி மருத்துவம் மற்றும் PEKA B40 போன்ற அரசாங்கத்திடமிருந்து சுகாதார உதவிகளைப் பெறுவதோடு, ஜொகூர் மக்கள் தங்கள் மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வதை உறுதி செய்வதாற்காகவும் என்றார்.

இந்நிகழ்வை, பி.கே.ஆர் தெப்ராவ் தொகுதி
 தலைவரும், செகாமட் நாடாளுமன்ற 
உறுப்பினருமான ரா. யுனேஸ்வரனன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles