

கோலாலம்பூர் செப் 19-
International Public Employment Form எனப்படும் அனைத்துலக பொது வேலை வாய்ப்பு 2023 மாநாடு முதல் முறையாக கோலாலம்பூரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கு (IPEF) 2023, கோலாலம்பூர் கொன்வென்ஷன் சென்டரில் (KLCC) அக்டோபர் 11-13 தேதிகளில் நடைபெறுகிறது.
2021 இல் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த மாநாடு நடத்தப் படவில்லை.
அடுத்த மாதம் நடக்கும் இந்த மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற மனித மூலதன மேம்பாட்டு நிபுணர்களின்
ஈடுபாட்டுடன் மூன்று நாட்களுக்கு நீடிக்கும்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நேற்று ஆர்டிஎம் 1 க்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.
இதனிடையே நேற்று நடைபெற்ற நேரடி ஒளிபரப்பில் சொக்சோ சமூக நல முயற்சிகள், இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம்
(SKSSR) குறித்து மனித வள அமைச்சர் சிவகுமார் முழு விளக்கம் அளித்தார்.
பெண்களுக்கான சிறப்பு சமூகப் பாதுகாப்புப் பலன்கள் குறித்து ஆழமான கருத்துக்களை அவர் வெளியிட்டார்.

