

புத்ரா ஜெயா செப் 29-
கடந்த ஆண்டில் தமிழ்ப் பள்ளிகள் தன்னார்வு தொண்டு நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள மொத்த 529 தமிழ்ப் பள்ளிகளில் 30க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் சுமார் 140 பள்ளிகள் உள்ளன என்று சமூக ஆர்வலர் அருண் இன்று மனித வள அமைச்சர் சிவகுமாரிடம் முறையிட்டார்.
ஒன்று முதல் ஆறு ஆண்டுகள் வரையிலான தமிழ்ப் பள்ளிகளில் 30 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
“தமிழ்ப் பள்ளிகள் உள்ள இடங்களில் இந்தியர்கள் இல்லை என்பதும், இந்தியர்கள் உள்ள பகுதிகளில் தமிழ்ப் பள்ளிகள் இல்லை என்பதும் காரணங்களில் ஒன்று அவர் சொன்னார்.
“மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்குப் பின்னால் உள்ள முக்கியப் பிரச்சினை இதுதான்.”
சமீபத்திய புள்ளிவிவரங்கள் 85,669 மாணவர்களுடன் 529 தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று அவர் சொன்னார்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் அபாயத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்ற மனிதவள அமைச்சர் வ சிவகுமார் முன் வர வேண்டும் என்று அருண் துரைசாமி தலைமையிலான தமிழ் ஆர்வலர்கள் குழு இன்று கோரிக்கையை முன் வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு எத்தகைய வழியில் தீர்வு காண்பது தொடர்பில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.

