26 தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்ற போராடும் அமைச்சர் சிவகுமார் பணி பாராட்டுக்குரியது

கோலாலம்பூர் , செப் 30-
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற களம் இறங்கி இருக்கும் மனித வள அமைச்சர் சிவகுமார் பணி பாராட்டுக்குரியது என்று மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுவின் கூட்டமைப்புத் தலைவர் வெறுறிவேலன் தெரிவித்தார்.

‘இந்த 26 தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகள் குறித்து கல்வி அமைச்சுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவேன்’, என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று அறிவித்தார்.

பேராக்கில் 10 பள்ளிகள், கெடாவில் 6 பள்ளிகள், பகாங்கில் 4 பள்ளிகள், சிலாங்கூரில் 3 பள்ளிகள், ஜோகூரில் 2 பள்ளிகள், நெகிரி செம்பிலானில் 1 பள்ளியும் 10க்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கிறது.

இந்தப் பள்ளிகள் காப்பாற்றப்படவில்லை என்றால், மிக விரைவில் அவை மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.

இந்தப் பள்ளிகள் மூடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வெற்றிவேலன் தெரிவித்தார். ‘நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற நாங்களும் போராடி வருகிறோம்’, என்றார் அவர்.

‘தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற அமைச்சர் சிவகுமார் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் பக்கப்பலமாக இருப்போம்’, என்று அவர் சொன்னார்.

எம். வெற்றிவேலன்
ஒருங்கிணைப்பாளர்,
ஆலோசனை மன்றம்,
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் சமூக இயக்கக் கூட்டமைப்புக் குழு,
29.9.2023
தொடர்பு எண்: 012-2427559

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles