தொழிலாளர் சந்தையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முதலாளிகளுக்கு நன்றி! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

பெந்தோங், செப் 30-
MYFUTUREJOBS CAREER CARNIVAL எனப்படும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதன் மூலம் வேலையின்மை விகிதத்தை குறைத்து தேசிய தொழிலாளர் சந்தையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முதலாளிகள் ஆதரவளிப்பதையும் மறக்கவில்லை என்றார் அவர்.

DATARAN ILMU FELDA CHEMOMOI, BENTONG, PAHANG மாநிலத்தில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அனைத்து மிகப்பெரிய அளவில் இன்று மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சி நடைபெற்றது.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

வேலை தேடுபவர்களுக்கும் தொழிலாளர் சந்தை வாய்ப்புகள் பரந்த அளவில் திறந்திருப்பதை உறுதி செய்வதில் பகாவ் மாநில அரசாங்கத்தின் அக்கறை மற்றும் ஆதரவை வழங்கிய பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டிக்கு இந்த நிகழ்வில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பினாங்கு மற்றும் சிலாங்கூரில் முந்தைய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி கார்னிவல் பகாங் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles