பினாங்கு மாநில தொழில் துறையினரின் வளர்ச்சி பெருமையளிக்கிறது! அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

செபெராங் பிறை, அக் 1-
பினாங்கு மாநிலத்தில் தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள தொழில் துறையினரின் வளர்ச்சி பெருமையளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

நேற்றிரவு நடைபெற்ற விருந்து மற்றும் நேரடி கலந்துரையாடல் அமர்வில் பினாங்கு மாநில தொழில் துறையினருடன் ஒன்றாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

திறமையான மனிதவளத்தின் தேவை மற்றும் TVET திறன் மேம்பாடுகள் குறித்து முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்.

முற்போக்கான ஊதியக் கொள்கை மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான பல கேள்விகளுக்கு நான் பதிலளித்துள்ளேன்.

தொழில்துறையினரின் குரல்கள், பரிந்துரைகள் மற்றும் நுண்ணறிவு யோசனைகளை நேரில் கேட்டறிய எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

Shan Poornam Metals Sdn Bhd தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ எஸ் செல்வகுமார் மற்றும் அனைத்து ஷான் பூர்ணம் மெட்டல் குழுவினருக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக எனது பாராட்டுக்களும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Shan Poornam Metals Sdn Bhd தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ எஸ் செல்வகுமார் இந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் தொழில்கள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ, மைக்கி எனப்படும் மலேசிய இந்திய தொழில் துறை சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என் கோபாலகிருஷ்ணன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles