சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் 188,102 இல்லத்தரசிகள் பங்களித்துள்ளனர்!

பெந்தோங், அக் 1-
இல்லத்தரசிகளுக்கான சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது முதல் இவ்வாண்டு
செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் மொத்தமாக 1 லட்சத்து 88 ஆயிரத்து 102 இல்லத்தரசிகள் இந்தத் திட்டத்தில் பங்களித்துள்ளனர் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

இதில் பி40 குடும்பங்களைச் சேர்ந்த 166 ஆயிரத்து 666 இல்லத்தரசிகள் அரசாங்கத்தால் நிதியுதவி பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 21 ஆயிரத்து 436 தன்னார்வ பங்களிப்பு. மாநிலப் பிரிவின்படி பார்த்தால், பகாங் மாநில முழுவதிலும் மொத்தம் 6 ஆயிரத்து 636 இந்த SKSSR திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

சொக்சோ நிறுவனத்தின் கீழ் நேற்று பகாங் மாநில பெந்தோங்கில் வேலை வாய்ப்பு கண்காட்சியில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் அதிக அளவில் பங்கேற்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles