

ஈப்போ, அக் 2-
பி-40 பிரிவினருக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள மடானி மருத்துவத் திட்டம் மலேசிய மடானி முயற்சிகளில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அரசாங்க மருத்துவமனை சிகிச்சை கட்டணம் உட்பட உண்மையிலேயே தேவைப் படுபவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி தொகைகள் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் அவை வகுக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
நேற்று ஈப்போவில் மடானி மருத்துவத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
வரும் அக்டோபர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2024 வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைச்சை தொடர்ந்து சுகாதார அமைச்சுக்கும கூடுதல் தொகை ஒதுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
நேற்று ஈப்போவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபா, மனித வள அமைச்சர் வ சிவகுமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

