

ஈப்போ அக் 2-
10 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி செயல்பட்டு வரும் மடானி மருத்துவ திட்டம் பி40 பிரிவில் 87 லட்சம் பேருக்கு மருத்துவ சேவை வழங்குவதை இலக்காக கொண்டு நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈப்போவில் நடைபெற்ற மடானி மருத்துவ திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
29-ஆம் தேதி வரை மடானி மருத்துவ திட்டத்தின் வழி 112,887 குடும்ப உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், மூன்று மாதங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 181,460 வெளிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரின் வழங்கிய ஆதரவினால் அனைத்து தரப்பினருக்கும் உதவுவதில் மடானி மருத்துவ திட்டம் வெற்றிப் பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மடானி மருத்துவத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த வேளையில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

