14 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு! பிரதமருக்கு நன்றியை பாராட்டினார் அமைச்சர் சிவகுமார்

புத்ரா ஜெயா, அக் 2-
அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் பெரிதும் பரிதவித்த இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று மனிதவள அமைச்சர்
வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

நகைக் கடைகள், முடித்திருத்தும் நிலையங்கள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் 7,500 அந்நிய தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளாக பரிதவித்த இந்திய பாரம்பரிய தொழில் துறையினருக்கு இப்போது புதிய விடிவுகாலம் பிறந்துள்ளது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இந்திய பாரம்பரிய தொழில் துறையினர் என்னை சந்தித்து கண்டிப்பாக உதவி புரியும் படி கேட்டுக் கொண்டனர்.

இவர்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள் குறித்து உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதியை பெற்றேன்.

பின்னர் அமைச்சரவையில் அறிக்கையை தாக்கல் செய்து 7,500 அந்நிய தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தி கொள்ள அரசாங்க அனுமதியை பெற்றேன்.

இந்திய பாரம்பரிய தொழில் துறையினர் எதிர் நோக்கிய 14 ஆண்டுகால பிரச்சனை நல்ல முறையில் தீர்வு காண பெரிதும் உதவி புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு இந்த வேளையில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles