
இன்று தலைநகர், WP தங்கும் விடுதியில் நடைபெற்ற மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் சிறப்பு மாநாட்டின்போது அதன் தேசிய தலைவர் டேவிட் மார்ஷல் அவ்வாறு கூறினார்.
இந்திய சமுதாயத்தில் நடந்து வரும் சமூக சீர்கேடுகளை களையவும் கல்வி சமயம் பொருளாதாரத்தில் நம்மவர்கள் மேம்பாடு அடையவும் அரசியல் கட்சிகளை மட்டும் சார்ந்திராமல், நம்மைப் போன்ற இயக்கத்தின் மூலமாகவும் பல்வேறு அனுகூலங்கள் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
சமுதாய உருமாற்றத்திற்க்காகவும் உரிமைகள் பறிக்கப்படும்போதும் மலேசிய தமிழர் குரல் குரலெழுப்ப ஒருபோதும் தயங்காது என செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினருமான டேவிட் மார்ஷல் கூறினார்.
இச்சிறப்பு கூட்டத்தில் கெடா, பேரா, பினாங்கு, பகாங்,ஜொகூர், சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்தை பிரிதிநிதித்து மாநிலத் தலைவர்களும் பேராளர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தின் இறுதியில் மலேசிய தமிழர் குரல் 2022-2024ஆம் தவனைக்கான மத்திய செயலவை தேர்ந்தெடுக்கப்பட்டது.
அனைத்து மாநிலங்களில் இருந்தும் 50க்கும் அதிகமானவர்கள் போட்டியிட்டார்கள்.
இதில் புதிய தவணைக்கான மலேசிய தமிழர் குரல் தேசிய தலைவராக திரு.கோபிநாதன் ஜெயராமன், துணை தலைவராக கணேசன், உதவி தலைவர்களாக திரு.தேவரத்தினம் பழனிவேலு. திரு. முகிந்தன், திரு. ஜனாத்தன். கௌரவ செயலாளராக திரு.சரவணன் நாகையா, துணை செயலாளராக திரு.ரமேஷ் ஏகாம்பரம், பொருளாளராக திரு.கோகிலன் மகேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் 23 பேர்கள் மத்திய செயலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

