
பேராக் மாநில சட்டமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. இதன் வழி 56 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளும் சேர்ந்து தேர்தல் நடத்தப்படுகிறது.
பேராக் மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கு பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் ஷா இணக்கம் தெரிவித்திருப்பதாக பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோ சாரணி முகமட் தெரிவித்தார்.

