பினாங்கு இந்து சபா நிர்வாகத்தின் கருணைக் கண்கள் ஏழை எளியவர்களின் பக்கம் ஒளிவீசியது.

கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிட்-19 காரணமாக முடக்கிக்கிடந்த பினாங்கு இந்து சபா கட்டிடத்தின் கதவுகள் பி40 மக்களுக்காக திறக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 பி40 மக்களுக்குத் தீபாவளி அன்பளிப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கி உதவி புரிந்தனர்.

பினாங்கு டத்தோ கிராமாட் சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்டீப் சிங் டியோ, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் சனீஸ்வரர் நேதாஜி ராயர் தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர்.

பினாங்கு இந்து சபாவின் புதிய தலைவர் வழக்கறிஞர் மு.கிருபாநந்தன், தலைமையில் நிகழ்ச்சி சிறப்பக நடைபெற்றது.

அன்பளிப்பு நிகழ்ச்சியை ஒருகிணைப்பு செய்து வழிநடத்தினார்

அர்வின் பூபாலன். விருந்தோம்பலுடன் நடைபெற்ற நடைபெற்ற பி40 மக்களுக்கான அன்பளிப்பு நிகழ்ச்சியில் 150 சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன் , நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ மரியதாஸ் கோபால், கோ.இளங்கோவன், கெப்டன்.பரமகுரு பாலன், கோமகன் லிங்கம், ஜேம்ஸ் மோகன், மா.தனலட்சுமி, எம்.ஜி.ஆர்.தேவன், நசீர் முகைதீன் இவர்களின் பேராதரவுடன் தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles