
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கெப்போங் பக்கத்தான் ஹரப்பான் ஏற்பாட்டில் தீபாவளி விருந்து நிகழ்ச்சி கெப்போங் சமூக மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிம் எங் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியை கெப்போங் கெஅடிலான் தொகுதி தலைவர் எம். ஜெயக்குமார் மற்றும் துணை தலைவர் எம். பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்தனர்.
இந்த லிருந்து நிகழ்ச்சியில் 50 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி வெகுமதிகள் வழங்கப்பட்டது.
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் கெப்போங் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் லிம் லிப் எங் மீண்டும் அமோக வெற்றி பெறுவார் என்று ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
கெப்போங் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இந்தியர்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு முழு ஆதரவு தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் பூச்சோங் முரளி உட்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

