

கோலாலம்பூர் அக் 11-
முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் இடையே எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் மின்னியல் சம்பள முறை நடைமுறைப் படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்களுக்கான மின்னியல் முறையில் சம்பள நடைமுறை திட்டம் கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு சில முதலாளிகள் முறையாக சம்பளம் கொடுப்பதில்லை.
இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சரவை கூட்டத்திலும் இதுபற்றி பேசி இருப்பதாக அவர் சொன்னார்.
இதை நடைமுறைப் படுத்துவதற்கு முன்னர் கலந்துரையாடல் நடத்த வேண்டியிருக்கிறது .
அதன் பின்னர் இது நடைமுறைக்கு வரும் என்று இன்று கோலாலம்பூர் கொன்வென்ஷன் செண்டரில் அனைத்துலக வேலை வாய்ப்பு சந்தை கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அனைத்துலக கருத்தரங்கில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

