

கோலாலம்பூர், அக்.11-
International Public Employment Form எனப்படும் அனைத்துலக பொது வேலை வாய்ப்பு 2023 கருத்தரங்கு ஆற்றல்மிக்க தொழிலாளர்களை வடிவமைப்பதில் மைல்கற்களாக விளங்கும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கு (IPEF) 2023, இப்போது கோலாலம்பூர் கொன்வென்ஷன் சென்டரில் (KLCC) அக்டோபர் 11-13 தேதிகளில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
தொழிலாளர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் பார்வையில் இந்த மாநாடு முக்கிய பங்காற்றும்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனம் (Perkeso) அர்ப்பணிப்பின் அடிப்படையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச வேலை வாய்ப்பு கருத்தரங்கை தொடக்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் சிவகுமார், சமூகப் பாதுகாப்பு அமைப்பு (PERKESO) ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு நெகிழ்வான பணியாளர்களை உருவாக்கும் மடானி அரசாங்கத்தின் அணுகுமுறையாகும் என்றார்.
அடுத்த மூன்று நாட்கள் மிகவும் ஆற்றல்மிக்க தொழிலாளர் நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கியமான மைல்கற்களாக இந்த கருத்தரங்கு இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நாட்டின் தொழில் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் வகையில் இந்த கருத்தரங்கு அமைந்துள்ளது.
ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், சவால்களை சமாளிக்கவும், தேசிய இலக்குகளை அடையவும் உதவும் CIVIL Malaysia அணுகுமுறையின் மூலம் மலேசியாவில் ஒரு நெகிழ்ச்சியான பணியாளர்களை உருவாக்க முடியும் என்று அவர் சொன்னார்.
சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ அஸ்மான், எச்ஆடிஎப் கோர்ப் செயல்முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட் ஆகியோர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.

