

கோலாலம்பூர் அக் 14-
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அவர்கள் நேற்று 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய போது திருக்குறளை மேற்கோள் காட்டியது பேசியது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்று திருக்குறளை சுட்டி காட்டினார்.
பின்னர் அந்த குரல் விளக்கத்தையும் தெளிவுபடுத்தினார்.
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்க கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதை பாதுகாத்துத் திட்டமிட்டு செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் என்று அவர் சொன்னார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் இப்போது பிரதமராக பதவி வகிக்கும் காலத்திலும் அவர் திருக்குறளை சுட்டி கட்டி பேசுவதை மறப்பதில்லை.
ஒரு அரசாங்கம் தூய்மையாக இருக்க வேண்டும். நாட்டின் வருவாய் மக்களுக்கு நேரடியாக போய் சேர வேண்டும்.
ஒரு நல்ல ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மன உறுதியுடன் இருக்கிறார் என்பதற்கு இந்த திருக்குறள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று அமைச்சர் சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
இதன் மூலம்
அனைத்து இன மக்களுக்கும் பிரதமர் என்பதை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் நிரூபித்துள்ளார் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

