

கோலாலம்பூர் அக் 14-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இல்லத்தரசிகள் பயன் பெறும் வகையில் இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளார்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இப்போது இல்லத்தரசிகள் பெரும் அளவில் நன்மை அடைந்து வருகிறார்கள் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
2024 பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கான சமூக நல பாதுகாப்பு திட்டத்திற்கு 50 மில்லியன் அதாவது 5 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
e-kasih கீழ் பதிந்துள்ள நான்கு லட்சம் இல்லத்தரசிகள் இதன் பயனடைவார்கள்.
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கான சமூக நல பாதுகாப்பு திட்டத்திற்கு 20 மில்லியன் (2 கோடி வெள்ளி) ஒதுக்கப்பட்டது.
ஆனால் இம்முறை கூடுதலாக 3 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதை பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
இல்லத்தரசிகள் மீது மடானி அரசாங்கம் அதிக அக்கறை கொண்டிருக்கிறது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

