
கோலாலம்பூர் அக் 14-
தீவேட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி துறையை வலுப்படுத்தும் நோக்கில், 2024-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 680 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.
திவேட் பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்காக 10 கோடி வெள்ளி இந்த ஒதுக்கீட்டில் உட்படுத்தப்பட்டிருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
160 கோடி ரிங்கிட் நிதியைப் பயன்படுத்தி மனித வள மேம்பாட்டு வாரியம் 17 லட்சம் பயிற்சிகளை வழங்கும்.
தொழில்முனைவோர், முன்னாள் குற்றவாளிகள், ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் ஆகிய பிரிவினருக்கு மடானி பயிற்சி திட்டம் வழி பயிற்சிகள் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தீவேட் தொழில் திறன் கல்வி துறைக்கு 680 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதன் மூலம் நாட்டில் திறன் வாய்ந்த தொழில் திறன் வாய்ந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்று அவர் சொன்னார்.

