
கோலாலம்பூர் அக் 16-
குறைந்த கட்டண விமான நிறுவனத்தில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் சமூக பாதுகாப்பு அமைப்பு (Socso) வேலை வாய்ப்பு காப்பீட்டு அமைப்பு (SIP) பலன்களைப் பெறுவார்கள் என்று மனிதவள அமைச்சர் வி சிவக்குமார் தெரிவித்தார்
SIP பங்களிப்புப் பதிவுகள் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் தொழிலாளர்களுக்கு வேலை தேடுதல் கொடுப்பனவு (EMP) பலன்கள் வழங்கப்படும் என்றார்.
“புதிய வேலை கிடைக்கும் வரை பணியாளர்கள் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு வருமான மாற்றத்தைப் பெறுவார்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வியாழன் அன்று MYAirline Sdn Bhd (MYAirline) ஒரு அறிக்கை மூலம் அதன் செயல்பாடுகள் காலை 6 மணி முதல் நிறுத்திவைக்கப்பட்டது மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டண விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவர்களின் நிதிச்சுமையை குறைக்க எப்போதும் அரசு தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
தொழிலாளர் நலன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சு அதன் நிறுவனமான சொக்சோ மூலம் சமீபத்திய முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று சுட்டிக் காட்டினார்.

