பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி!

செபராங் ஜெயா, அக் 16-
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான டத்தோ பி.கே.சுப்பையா (ஆண்கள்) மற்றும் திரிதோனி (பெண்கள்) சுழற்கிண்ண காற்பந்து போட்டி 14-10-2023 ஆம் நாளன்று செபராங் ஜெயா, “சோனி” விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த இருபது வருடங்களாக மிகச் சிறப்பாக நடைபெற்றுவரும் இவ்விளையாட்டுப் போட்டி பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், மத்திய செபராங் பிறை காற்பந்து சங்கத்தின் துணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

12-வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கு இவ்வாண்டு “திரிதோனி” என்ற பெயரில் புதிய சுழற்கிண்ணம் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இப்போட்டியின் தொடக்க நிகழ்வில் ஜாலான் பாரு முனிஸ்வர் ஆலயத் தலைவர், மேஜர் சேகரன், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர், திரு.குணசேகரன், மலேசிய இந்தியர் காற்பந்து சங்க துணைத் தலைவர் திரு.‚ சங்கர், செயலாளர் திரு.கமலேஸ்வரன், நகராண்மை கழக உறுப்பினர் திரு.பொன்னுதுரை, திரிதோனி நிறுவன இயக்குனர் திருமதி பரமேஸ்வரி, பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத் தலைவர், திரு.சங்கர், துணைத்தலைவர் திரு.பிரேம் குமார், பினாங்கு மாநில கல்வி இலாகாவின் துணை இயக்குனர் திரு.சக்திவேல் மற்றும் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ச.தேவேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாண்டிற்கான ஆண்கள் பிரிவு டத்த பி.கே.சுப்பையா சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி முதல் நிலை, சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலை, பிறைத் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலை, வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி நான்காம் நிலையிலும் வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவு “திரிதோனி’ சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி முதல் நிலை, கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலை, அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலை, திரான்ஸ்கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி நான்காம் நிலையிலும் வெற்றி பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles