டேவ்ஸ் ஸ்டுடியோ ஏற்பாட்டில் மாபெரும் தீபாவளி மேலா

தீபாவளியை முன்னிட்டு டேவ்ஸ் ஸ்டுடியோ ஏற்பாட்டில் ஜோகூர் ஸ்கூடாய் சூத்தரா பேரங்கடியில் மாபெரும் தீபாவளி மேலா பசார் நடைபெறவிருக்கிறது.

நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை இந்த பசார் நடைபெறவுள்ளது.

சுற்று வட்டாரத்தில் உள்ள சிறு வர்த்தகர்கள் இந்த பசாரில் உள்ள அங்காடி கடைகள் மூலம் தங்களின் வியாபாரங்களை விரிவுப்படுத்தி கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

அதோடு, இக்கொண்டாட்டத்தில் பாரம்பரிய நிகழ்ச்சிகள், வண்ணம் தீட்டும் போட்டிகள், பயிற்சி அங்கம், மருதானி விழா, சிறுவர்களுக்கான ஆடை அலங்கார போட்டிகளும் இடம் பெறவுள்ளன.

இதனிடையே, டேவ்ஸ் ஸ்டுடியோவின் சமுதாய பணிகளின் ஓர் அங்கமாக ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவும் நிகழ்ச்சி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும்.

தொழில் செய்பவர்கள் அங்காடி கடைகளை பெறுவதற்கு 011 26779209 என்ற எண்ணில் ஏற்பாட்டு குழுவினரை தொடர்புக் கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles