
கோலாலம்பூர் அக் 17-
அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறும் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற்றுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறாமல் இருந்தது.
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ உட்பட பல தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய
மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இறுதியில் சிலம்பம் மற்றும் கபடி சுக்மாவில் இடம் பெறுவதற்கு அனுமதியை பெற்றுத் தந்து சாதனை படைத்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரை மலேசிய சிலம்பக் கழகத்தின் நிரந்தர தலைவர் டத்தோ வி.எல். காந்தன் நேரில் சந்தித்து தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
பத்து ஆண்டுகளாக மீண்டும் சுக்மாவில் இடம் பெற சிலம்பம் மற்றும் கபடி சங்கங்கள் நடத்திய போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
இதற்கு பக்கப் பலமாக இருந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றேன் என்றார் அவர்.

