

கோலாலம்பூர், அக் 29-
நூறு ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் பழமை வாய்ந்த லெபோ அம்பாங் தொடர்ந்து இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தக தளமாக நிலை நிறுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
லேபோ அம்பாங்கில் இந்தியர்கள் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
மலேசிய இந்தியர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் லேபோ அம்பாங் விளங்குகிறது.
இந்த இடம் தொடர்ந்து இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தக தளமாக நிலை நிறுத்தப்படும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று லெபோ அம்பாங்கில் பிரதமருடன் தீபாவளி இன்னிசை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மனிதவள அமைச்சர் சிவகுமார் மற்றும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், துணை தலைவர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
பிரிமாஸ் தலைவர் சுரேஸ், மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராஜசேகரன், துணை செயலாளர் மீராகுமார், மைக்கி சார்பில் ஞானசம்பந்தன் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்

