வரலாற்று சிறப்புமிக்க பேராக் இந்தியன் ரிக்ரேஷன் கிளப்புக்கு அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்

ஈப்போ, அக் 29-
கடந்த 1952 இல் பேராக் புந்தோங்கில் இந்தியன் ரிக்ரேஷன் கிளப்( ஐ.ஆர்.சி) உருவானது.

பேராக் ஐ.ஆர்.சி கிளப்பிற்கு தனிப்பட்ட வரலாறு என்றென்றும் உண்டு.

இந்த கிளப்பின் கட்டடம் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டடம் நிறைவு செய்த பின் இங்கு சமூக நல நடவடிக்கைகள் மக்கள் நலன் கருதி துரிதப்படுத்தப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

குறிப்பாக, தேவார வகுப்புகள், தற்காப்பு கலை பயிற்சிகள், கருத்தரங்கு பட்டறை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற இந்த கிளப்பின் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருவதை தாம் அறிந்திருப்பதாக அவர் சொன்னார்.

பேராக் இந்தியன் ஐஆர்சி கிளப்புக்கு 50,000 வெள்ளி மானியமும் வழங்கி பேருதவி புரிந்தார்.

இந்த நிதியுதவி முதல் கட்ட நிதியுதவியாகும். இதனைத் தொடர்ந்து மேலும் நிதியுதவிகள் இந்த கிளப்பிற்கு வழங்கப்படும் என்றார் அவர்

பல நன்கொடை நெஞ்சர்களும், வணிகர்களும் மற் றும் சமூக நல இயக்கங்களும் இந்த கிளப்பிற்கு நிதியுதவி வழங்க முன்வருமாறு அமைச்சர் சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம்.துள்சி மற றும் ஐ ஆர் சி கிளப் நிர்வாகத்தினர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles