அரசு பகுதி உதவிபெற்ற தமிழ்ப்பள்ளிகளின் கழிப்பறைகள் சீரமைக்கப்படும்! தமிழ்க் கல்வி பிரச்சனைக்கும் தீர்வு – அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர் அக் 28-
நாட்டில் உள்ள அரசு பகுதி உதவிபெறும் தமிழ்ப் பள்ளிகளின் கழிப்பறைகள் சீரமைக்கப்படும் என்ற செய்தி வரவேற்கக் கூடியது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகள் விவகாரம் குறித்து பேசப்பட்டது.

2023 பட்ஜெட்டில் நாட்டில் உள்ள அனைத்து மொழி பள்ளிகளுக்கும் மிகப்பெரிய மானியம் வழங்கப்பட்டது.

பள்ளிகளின் கழிப்பறைகள் சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி எதற்கு வழங்கப்பட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக், அரசாங்க முழு உதவி பெற்ற பள்ளிகளின் கழிப்பறைகள் சீரமைக்க நிதி வழங்கப்பட்டது என்றார்.

அப்படியானால் அரசு பகுதி உதவிபெற்ற பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படவில்லையா என்று பிரதமர் கேட்டார்.

இதற்கு இல்லை என்று கல்வி அமைச்சர் பாட்லினா கூறியபோது உடனடியாக தலையிட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசு பகுதி உதவிபெற்ற அனைத்து மொழி பள்ளிகளுக்கும் நிதியை வழங்குங்கள் என்றார்.

இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளும் பெரும் அளவில் நன்மை பயக்கும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இதனிடையே இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் கல்வி போதிப்பது குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டதாக அவர் சொன்னார்

இதற்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் 72 ஆம் ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles