
மாலிம் நாவார்,அக்29:
அலட்சியம் மற்றும் கவனக்குறைவுகளால் வீடுகளில் நிகழும் தீ விபத்துகளை தவிர்க்க பொது மக்கள் விழிபுடன் இருக்க வேண்டும் என மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி கேட்டுக் கொண்டார்.
மிக எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் உட்பட மின்சாரம் அதுசார்ந்த பயன்பாடுகளில் பொது மக்கள் தீவிர கவனத்துடனும் அதனை விவேகமாய் கையாளும் திறனையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன் வாயிலாக தீ விபத்தினால் பெரும் இழப்புகளை தவிர்ப்பத்தோடு உயிர்சேதங்களையும் தவிர்க்க முடியும் என்றார்.

சிலநேரங்களில் வீடுகளில் ஏற்படும் தீ விபத்துதான் மிக மோசமான பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்துகிறது என்பதையும் சுட்டிக்காண்பித்த சட்டமன்ற உறுப்பினர் இவ்விவகாரங்களில் நமது விழிப்பு நிலையும் பாதுகாப்பு செயல்முறையும் ஆக்கப்பூர்வமானதாய் அமையும் என்றும் நினைவுறுத்தினார்.
கம்பார் தாமான் மகோத்தாவில் நடைபெற்ற மடானி குடும்ப கேளிக்கை நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அவர் இதனை வலியுறுத்தினார்.
மேலும்,அங்கு நடைபெற்ற தீயணைப்பு இலாகாவின் பாதுகாப்பு செயல்முறை நடைவடிக்கைகளையும் பார்வையிட்ட பின்னர் அவர் தனது அதிகாரப்பூர்வ உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்,பொது மக்களின் விழிப்புணர்வும் பொறுப்பும் நாட்டில் நிகழும் வீடுகளில் ஏற்படும் தீ விபத்து மற்றும் அதனால் ஏற்படும் இழப்புகளின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைக்கப்படும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

