மாணவர்கள் மத்தியில் தமிழுணர்வு விதைக்கப்பட வேண்டும் – சிவநேசனின் சிறப்பு அதிகாரி நினைவுறுத்து!!

பாரிட் புந்தார்,அக்29:

தமிழுணர்வும் நம் இனத்தின் பண்பாடும் பாரம்பரியமும் மாணவர்கள் மத்தியில் ஆழமாய் விதைக்கப்பட வேண்டும்.மாணவர்கள் மத்தியில் விதைக்கப்ப்டும் இவ்வுணர்வு நம் இனத்தின் வருங்கால போற்றுதல்குரிய பெருமையாக திகழும் என்றும் பேரா மாநில அளவிலான செந்தமிழ் விழாவினை நிறைவு செய்து வைத்து பேசிய மாநில ஆட்சிகுழு உறுப்பினர் அ.சிவநேசனின் சிறப்பு அதிகாரி திரு.முத்துசாமி நினைவுறுத்தினார்.

மேலும்,மாணவர்களிடையே காணப்படும் திறனை இம்மாதிரியான போட்டிகள் வாயிலாக வெளிக்கொண்ர செய்வது மிகவும் அவசியம் என்றார். அத்தகைய சிறப்பு மிகு பணியினை முன்னெடுத்து வரும் இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர்கள் போற்றுதல்குரியவர்கள் என்றும் புகழாரம் சூட்டினார்.

முன்னதாக இம்மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இந்நிகழ்ச்சிக்கு இனம்,மொழி பாராமல் கல்வி இலாகா அதிகாரிகள் உட்பட வட்டார சீனப்பள்ளி,மலாய்ப்பள்ளி,இடைநிலைப்பள்ளி மற்ற இன ஆசிரியர்களின் வருகையும் ஒத்துழைப்பும் நமது ஒற்றுமை அரசாங்கத்தின் மடானி கொள்கைக்கு ஒப்ப மேலோங்கி இருப்பதாகவும் கூறினார்.

மேலும்,இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையும் புரிந்துணர்வும் மலேசியர்களிடையே குறைந்திருப்பதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பொறுப்பற்றவர்கள் பரப்பி வந்தாலும் மலேசியர்களின் ஒற்றுமையும் புரிந்துணர்வும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாகவே அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழ்ப்பள்ளிகளில் தன் பிள்ளைகளை அனுப்பாதவர்களை இந்த சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்றும் வாய்கிழிய தமிழ்,தமிழர் என பேசுவோர் தன் வீட்டுப்பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில்ம்போடாமல் இனத்திற்கும் மொழிக்கும் துரோகம் செய்வதாக சாடினார்.

இறுதியாய் வெற்றியாளர்களை பாராட்டிய அவர் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

முன்னதாக பேரா மாநிலத்தில் இருக்கு ம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் இடைநிலைப்பள்ளியின் இந்திய மாணவர்களின் நலனிலும் பல்வேறு ஆக்கப்பூர்வமாக பங்களிப்பை மாண்புமிகு சிவநேசன் வழங்கி வருவதாகவும் அவரது தலைமைத்துவத்தில் மாநில இந்தியர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழ்ந்து வருவதாகவும் பெருமிதம் கொள்ள அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles