200 இந்தியர்களுக்கு தீபாவளி உதவி பொருட்கள்- எலிஸ் ச்சூ

ரவாங் வட்டாரத்தில் வாழும் பி40 இந்திய மக்களுக்கு உதவும் வகையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது .

செலாயாங் நகரான்மைக் கழக உறுப்பினர் எலிஸ் ச்சூ ஏற்பாட்டில் இன்று ரவாங் நியூ கிரீன் பார்க்கில் அமைந்துள்ள வலைப்பந்து மைதானத்தில் சுமார் 200 பேருக்கு இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவிட் பெருந்தொற்று முடிந்து மக்கள் பெரிதும் பொருளாதார சிக்கலை எதிர்கொள்கின்றார்கள். பெருநாள் காலங்களில் மக்களுக்கு சுமை அதிகமாகத்தான் இருக்கக்கூடும். அவர்களின் சுமையை குறைத்து அவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்துடன் தாம் இந்த ஏற்பாடு செய்திருப்பதாக எலிஸ் ச்சூ கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு உணவு பொருட்கள் கொடுத்து பெரிதும் உதவியாக இருந்த FFM Berhad நிறுவனத்துக்கும் அதன் தலைமைச் செயல் அதிகாரி ஜெரேமி கூன் அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் நிகழ்ச்சியில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் ஸிவா வேய் கியாட், உலுசிலாங்கூர் நகரான்மைக்கழக உறுப்பினர் ப.புவனேஸ்வரன் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles