Dk மலேசியா சங்கத்தின் ஏற்பாட்டில் காஜாங் வட்டாரத்தில் 700 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்

காஜாங் வட்டாரத்தில் சிறந்த சமூக சேவையாளராக வலம் வந்து கொண்டிருக்கும் டத்தோ காஜாங் கலையை ஆலோசகராக இருக்கும் டி.கே. மலேசியா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் 700 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

டி.கே மலேசியா சங்கத்தின் தலைவர் தனபாலன் தலைமையில் 2 ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் உலுலங்காட் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஜோஹான், தொகுதி ம இகா தலைவர் டாக்டர் செல்வா, காஜாங் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் டத்தோ லீ பாங் செக், டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான். டத்தோஸ்ரீ முகமட் சைபுள் டத்தோஸ்ரீ ஜெயசந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தீபாவளி பண்டிகை ஏழை எளிய மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என்று டத்தோ கலை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தேசிய முன்னணி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி வந்தோம்.

இப்போது கடந்த இரு ஆண்டுகளாக டி.கே. மலேசியா சங்கத்தின் சார்பில் ஏழை மக்களுக்கு உதவிகள் சென்று அடைவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles