DHRRA MALAYSIA சேவைகள் தொடர 50,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார் மனிதவள அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர் நவ 5-
நாட்டில் குடியுரிமை இல்லாமல் இருக்கும் மலேசியர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தரும் முயற்சியில் பல ஆண்டுகளாக போராடி வரும் டிரா மலேசிய இயக்கத்திற்கு மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று 50,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.

குடியுரிமை இல்லாமல் பரிதவிக்கும் மலேசியர்களுக்கு தேசிய பதிவு இலாகா மூலம் குடியுரிமை கிடைக்க டிரா மலேசிய மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியது.

டிரா மலேசியாவின் சமுதாயப் பணிகள் தொடரும் வகையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று டிரா மலேசியாவின் தலைவர் சரவணனிடம் 50,000 வெள்ளிக்கான மாதிரி காசோலையை அமைச்சர் சிவகுமார் நேரடியாக வழங்கினார்.

தக்க நேரத்தில் டிரா மலேசிய இயக்கத்திற்கு பேருதவி புரிந்த அமைச்சர் சிவகுமாருக்கு டிரா மலேசிய தலைவர் சரவணன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles