மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, மனிதவள அமைச்ச எப்போதும் செயலில் உள்ளது! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

பத்துகேவ்ஸ், நவ 5-
மக்களின் நலன்கள் மற்றும் நல்வாழ்வு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய,
SOCSO மூலம் மனிதவள அமைச்சு எப்போதும் செயலில் உள்ளது என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

நாடு முழுவதும் வேலை வாய்ப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் மனித வள அமைச்சு மிகவும் தீவிரமாக உள்ளது.

MYFutureJobs போர்ட்டலை இலக்காகக் கொண்டு
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், வேலையில்லாத நபர்களுக்கு உதவி வருகிறது.

வேலை தேடுபவரின் தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 954,520 பேர் வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் வேலை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.

மனித வள அமைச்சின் முயற்சியால்
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 231,267
வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் நன்மைகளை அடைந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

மனிதவள அமைச்சு ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஜெலாஜா மடானி நிகழ்வு இன்று மிகப்பெரிய அளவில் பத்துகேவ்ஸ் கம்போங் மெலாயூ வீரா டாமாய் மண்டபத்தில் நடைபெற்றது.

மனித வள அமைச்சர் சிவகுமார் மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்
Dato’ Seri Haji Amirudin bin Shari, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Tuan Papparaidu A/L Veraman , எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி
Datuk Wira Shahul Dawood உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PERKESO, HRD Corp, TalentCorp, Niosh dan Perbadanan Tabung
Pembangunan Kemahiran (PTPK) நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles