


கோலாலம்பூர் நவ 5-
தீபாவளி பண்டிகை காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி வரும் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் சேவை அளப்பரியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் குயில் ஜெயபக்தி நிறுவனம் தீபாவளியின் போது வசதி குறைந்த மக்களுக்கு உதவி வருவதை நான் அறிவேன்.
அந்த வகையில் இவ்வாண்டும் 300 குடும்பங்களுக்கு குயில் ஜெயபக்தி நிறுவனம் வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பை வழங்கியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தலைமையில் நேற்று 300 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது.
மனிதவள அமைச்சர் சிவகுமார், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், விலாயா மாநில கெஅடிலான் இளைஞர் பகுதி தலைவர் ஜோனதான், டாக்டர் பி. எஸ். பிள்ளை ஆகியோர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

