
கோலாலம்பூர் நவ 7-
நாட்டில் புகழ்பெற்ற சமூக சேவையாளர் மற்றும் சிலம்ப கலை வளர்ச்சிக்கு அயராத
உழைத்த டாக்டர் பி.எஸ். பிள்ளை தலையிலான கோலாலம்பூர் ஜூவாரா சிலம்ப கிளப்புக்கு மனித வள அமைச்சர் வ. சிவகுமார் 10,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
நாட்டில் சிலம்பக் கலை வேரூன்றி நிலைத்திருக்க இரவு பகல் பாராது உழைத்தவர்களில் டாக்டர் பி.எஸ். பிள்ளையும் ஒருவர் ஆவார்.
தேசியத்திலும் கூட்டரசு பிரதேசத்திலும் முக்கிய பொறுப்பு வகித்து சிலம்ப வகுப்புகளை நடத்தி ஏராளமான சிலம்ப மாணவர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
இந்நிலையில் இவர் தலைவராக இருக்கும் கோலாலம்பூர் ஜூவாரா சிலம்ப கிளப்புக்கு மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் 10,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சிவகுமார் மேற்கொண்ட தொடர் முயற்சியால் வரும் 2024 ஆம் ஆண்டில் சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி மீண்டும் இடம் பெற்றுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக இவ்விரு போட்டிகளும் சுக்மாவில் இடம் பெறாமல் இருந்தது.
ஆனால் இன்று இவ்விரு போட்டிகளையும் சுக்மாவில் இணைந்த அமைச்சர் சிவகுமார் மிகவும் பாராட்டுக்குறியவர் என்று டாக்டர் பி.எஸ். பிள்ளை குறிப்பிட்டார்.
மனிதவள அமைச்சராக பதவி வகிக்கும் சிவகுமார் சிறந்த முறையில் இந்திய சமுதாயத்திற்கு சேவைகளை ஆற்றி வருகிறார் .
இவரின் சேவைகள் தொடர நாம் தொடர்ந்து முழு ஆதரவை வழங்குவோம் என்று டாக்டர் பி.எஸ். பிள்ளை தெரிவித்தார்.
தக்க தருணத்தில் கோலாலம்பூர் ஜூவாரா சிலம்ப கிளப்புக்கு பேருதவி புரிந்த அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
கோலாலம்பூர் ஜூவாரா சிலம்ப கிளப்புக்கு அமைச்சர் சிவகுமார் மாதிரி காசோலையை வழங்கும் நிகழ்வில் கிளப்பின் செயலாளர் ஆதியப்பன், உதவித் தலைவர் டாக்டர் யோகேஸ்வரன் மற்றும் உறுப்பினர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

