தொழிலாளர் நலன்கள் தொடர்பில்மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் முக்கிய சந்திப்பு!

கோலாலம்பூர் நவ 7-
தொழிலாளர் நலன்கள் மற்றும் மலாக்காவுக்கு வருகை புரியுங்கள் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது தொடர்பில் மனிதவள அமைச்சர் வ சிவகுமாருடன் நேற்று மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் முக்கிய சந்திப்பை நடத்தினர்.

YB Tuan Ngwe Hee Sem, EXCO of Health, Human Resources – Unity of Melaka மற்றும் YB Puan Siti Faizah binti Datuk Abd Azis, deputy EXCO, Health, Human Resources and Unity ஆகியோர் நேற்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்தனர்.

இந்த வருகை அமர்வின் போது, 2024 Visit Melaka Year campaign
பிரச்சாரத்தை கொண்டாடுவதற்கான திட்ட ஒத்துழைப்பு, தொழிலாளர் நடைமுறை, மாணவர்களுக்கான சமூக பாதுகாப்பு பிரச்சினை மற்றும் குறைந்தபட்ச ஊதியக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து இரு தரப்பிலும் ஆழமாக விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் மனித வள அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முழு
விளக்கம் அளித்தனர்..

மத்திய அரசுக்கும் மலாக்கா மாநில அரசாங்கத்திற்கும் இடையே பொருளாதார நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த உள்ளடக்கம் நிறைந்த விவாதமும் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles